திருப்பூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மேயர் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட பொங்கல் திருநாள் சிறப்பு தொகுப்பினை, இன்று (09/01/2025) வார்டு எண் 49 உட்பட்ட,பாரதி நகர், ஆர் கே கார்டன், சுப்பிரமணிய நகர்,ஆர் வி இ நகர், கான்வென்ட் கார்டன், ரியல் மகளிர் சுய உதவிக் குழு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கி வைத்தார். வடக்கு மாநகர கழக செயலாளர், மேயர் ந.தினேஷ்குமார், பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி, வட்டகழக செயலாளர் மனோகரன், பகுதி அவைத்தலைவர் சுப்பிரமணியம், ஜேம்ஸ், அமிர்தலிங்கம், சுகந்தி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை. அவரவர் வழிபாடும் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு அதற்கு மேலாக உலகிற்கே வாழ்வளிக்கும் சூரியனை வணங்கி – உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளையும் மறக்காமல் அவற்றுக்கு நன்றி பாராட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போலச் சிறப்பு மிக்க இன்னொரு விழாவை-பண்பாடு போற்றும் பண்டிகையைக் காணமுடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




