--- --:--:-- --

சவுதி அரேபியாவில் பெய்து வரும் பலத்த மழை..!

11

சவுதி அரேபியா நாட்டின் பல்வேறு பகுதிகளில்  கடந்த திங்கட்கிழமை முதல் இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மெக்கா, மதீனா போன்ற பகுதிகளில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்   மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

 

சவூதி சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் கூற்றுப்படி, மிதமானது முதல் கனமழை வரை நாட்டின் பிற பகுதிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. மதீனாவின் பத்ர் கவர்னரேட்டில் உள்ள அல் ஷாஃபியாவில் 49.2 மி.மீ மழையும், ஜெட்டாவின் அல் பசதீன் மாவட்டத்தில் 38 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நபிகள் நாயகத்தின் மசூதிக்கு அருகிலுள்ள மத்திய ஹரம் பகுதியில் 36.1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மெக்கா, மதீனா, காசிம், தபுக், வடக்கு எல்லைகள் மற்றும் அல் ஜவ்ஃப் பகுதிகளில் மழை தொடரும் என்று சவூதி அமைச்சகம் அறிவித்திருந்தது. சவுதி அரேபியாவில் பெய்து வரும் மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய கார்கள் மற்றும் சாலையின் நடுவில் சிக்கித் தவிக்கும் பேருந்துகள் போன்ற காட்சிகள் சாட்சிகளாக உள்ளது.. சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜெட்டா நகரம், அதன் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, இப்போது கடும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

 

இது புனித நகரமான மெக்காவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் இடியுடன் கூடிய மழை, மற்றும் ஆலங்கட்டி மழையும்  பெய்துவருகிறது. தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன.

தற்போது மெக்கா, மதீனா மற்றும் துறைமுக நகரமான ஜெட்டாவிற்கு சவுதி அரேபிய வானிலை ஆய்வு மையம்  சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தநிலையில்  ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், மோசமான  வானிலை காரணமாக விமான புறப்படும் மற்றும் வந்து சேரும் அட்டவணைகள் குறித்த புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை வலியுறுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்துடன் பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon