ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதிக்கும் ஆளுநரை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதனையடுத்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
விளக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பின் தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகவும் அரசமைப்பு சாசனம் தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என்பதால் மிகுந்த வருத்தத்தில் அவர் பேரவையிலிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபை மீறுவதையே ஆளுநர் ரவி தனது வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். நிர்வாக தோல்வியை மறைக்கவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ள மக்களின் கோபத்தை திசை திருப்பவும் தமிழக அரசு ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





