--- --:--:-- --

இந்தியாவில் HMPV பாதிப்பு 3 ஆக உயர்வு..!

4

ந்தியாவில் HMPV பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆ உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு கண்டறிந்த நிலையில் குஜராத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

பெங்களூரை சேர்ந்த 3 மற்றும் 8 மாத குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் – அகமதாபாத்தை சேர்ந்த 2 மாத குழந்தைகளுக்கும் HMPV பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

சீனாவில் வேகமாக பரவும் HMPV பாதிப்பு இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத நிலையில் 3 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon