பெஞ்சல் புயலுக்கு 40 பேர் பலி: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்மையில் தாக்கிய பெஞ்சல் புயலுக்கு 40 பேர் பலியாகி இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் RN ரவி வெளியேறியதையடுத்து, சபாநாயகர் அந்த உரையை வாசித்தார்.
அதில், புயலால் 14 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.6,675 கோடி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




