மாஸ்க் அணிவது கட்டாயம்: முதல் மாநிலமாக அமல்
HMPV வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




