--- --:--:-- --

பொருளை ஆர்டர் செய்த பெண்..பார்சலில் வந்த சடலம்..!

5

ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 1.3 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து பார்சலில் ஆண் சடலத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேற்கு கோதாவரி மாவட்டம் வெண்டக்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த நாகா துளசி அரசு கொடுத்த இலவச வீட்டு மலையில் சேவா அமைப்பின் உதவியுடன் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கான மின்சாதன பொருட்களை அவர் கேட்டிருந்த நிலையில் சேவா அமைப்பினர் அதனை பார்சலில் அனுப்புவதாக கூறி இருந்தனர்.

 

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் நாகா துளசி வீட்டு வாசலில் ஒரு பார்சலை வைத்துவிட்டு சென்றார். அதை திறந்து பார்த்த பொழுது அதில் 45 வயது ஆண் சடலம் கிடந்ததால் காவல்துறையில் நாகா துளசி புகார் அளித்தார். அந்த பார்சலை புக்கிங் செய்தது யார் என்று விசாரணை நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon