நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த கைப்பை..!
நாடாளுமன்றத்தில் நிலவும் கடும் அமளிக்கு இடையே கைப்பை அரசியலும் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பாலஸ்தீனம் மற்றும் வங்கதேச படுகொலைகள் குறித்த கைப்பைகளை நாடாளுமன்ற வளாகத்திற்குள் எடுத்து வந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக 1984 என சிவப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட கைப்பையை பாஜக mp கொண்டு வந்தார். 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு நடந்த சீக்கிய படுகொலைகளை நினைவூட்டும் வகையில் இந்த கைப்பை அமைந்திருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





