--- --:--:-- --

வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அதிர்ச்சி..!

7

போபால் அருகே வனபகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 52 கிலோ தங்கம் கட்டு கட்டாக பத்து கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரெண்டேரி வனப்பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து முப்பது வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்த போலீசார் அதிலிருந்து 502 கிலோ தங்க கட்டிகள் கட்டு கட்டாக பத்து கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட கார் குவாலியரை சேர்ந்த சேட்டன் கௌரவம் சர்மா ஆகியோருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. அண்மையில் சௌரோஷர்மா வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon