கட்டுவிரியன் பாம்பு கடித்து நபர் பலியான சோகம்..!
குடியாத்தம் அருகே குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடிவிரியின் பாம்பை பிடித்து சாகசம் செய்த நபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி பகுதியில் சாலையோரம் கொடிய விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு ஒன்று சென்றுள்ளது.
அப்பொழுது அந்த பகுதியில் குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்த காமாட்சி அம்மன் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் அந்த கண்ணாடிவிரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்துள்ளார். அப்பொழுது அந்த பாம்பு அவரை வளமாக கடித்துள்ளது.
இதில் வலியில் துடித்த தேவராஜ் அருகில் இருந்து அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தேவராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





