டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து..ஓட்டுநர் உடலில் பாய்ந்த மின்சாரம்..!
மீஞ்சூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை மூலக்கடை பகுதியில் இருந்து கோழிக்கறிகளை வாகனத்தில் ஏற்றியபடி அத்திப்பட்டு இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்திரா நகர் சாலையில் கட்டுபாட்டை இழந்த வாகனம் சாலையில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருந்த ட்ரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





