விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




