இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் பாஜக பல முயற்சி மேற்கொண்டிருப்பதாக விமர்சித்தார். வெறுப்புணர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாகவும், இதில் வெற்றி பெற அரசியல் அதிகாரம் அவசியம் என்றும் கூறினார்.