தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என்ற அவர், அரசு சட்டம் ஒழுங்கில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக், போதை கலாசாரத்தைக் கட்டுப்படுத்தாததே குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.