தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் டைவர்ஸ் வழக்கு நடந்து வந்தாலும், இருவரும் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு ஏற்றாற்போல், கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தனர். ஆனால், கடந்த 21ஆம் தேதி நடந்த விசாரணையில், இருவரும் நேரில் ஆஜராகி பிரிவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினர்.