இன்னும் 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது..!
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை சிறிது ஓய்ந்த பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வலுவடைந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிகவும் கடுமையான வானிலை கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு தற்பொழுது மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து அதற்கு வங்காள விரிகுடாவில் இன்று மையம் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு நாட்களுக்குள் தமிழகம் இலங்கை கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





