தவெக மாநாட்டை அடுத்து விஜய்யின் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட ஏதுவான தொகுதி எது என ஆய்வு செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நிர்வாகிகள் அளித்த பட்டியலில் நாகப்பட்டினம் தொகுதி முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தூத்துக்குடி, அரியலூர் தொகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.