கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!

சேலம் மாவட்டத்தில் சாலையோர கோயிலை இடித்து சுவாமி சிலையை எடுத்துச் சென்ற நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் அருகே மாலையன் குட்டை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்துள்ளது.

 

இந்த கோயிலால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக தனி நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து என்னை உயர்நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி கோயிலை இடித்த அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் பிள்ளையார் சிலையை எடுத்துச் சென்றனர்.

 

அப்பொழுது ஒன்று கூடிய பொதுமக்கள் சிலையை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளரின் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.