மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
கோவையில் தன்னிடம் படித்த முன்னாள் மாணவிக்கு உதவி செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து தவறாக நடக்க முயன்றதாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான பெண் தான் முன்பு வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் கொடுத்த கல்வி சான்றிதழை மீண்டும் பெற முடியாததால் அதன் நகலை பெற தனது கல்லூரி கால பேராசிரியரான கோவை கல்வீரம்பாளையத்தை சிவப்பிரகாசத்தை அணுகியுள்ளார்.
வீட்டிற்கு வந்து சந்திக்குமாறு கூறியதை நம்பி சென்ற அந்த பெண்ணிடம் பேராசிரியர் தவறாக நடக்க முயன்றுள்ளார். பயந்து போன இளம் பெண் வீட்டின் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு தோழியை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறிய நிலையில் போலீசார் அந்த பேராசிரியரை கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





