சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7,900 ஹாஸ்பிடல்கள், 45,000 டாக்டர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.