--- --:--:-- --

திருவாடானை அருகே பள்ளி மாணவிகள் இருவர்  குளத்தில் மூழ்கி பலி..!

1.1

திருவாடானை அருகே பள்ளி மாணவிகள் இருவர்  குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டிணம் கிராமத்தில் காலணி பகுதியை சேர்ந்த குழந்தைகள் சுமார் 7 பேர் பள்ளிவாசல் அருகே உள்ள குளத்தில் இன்று மாலை  குளிப்பதற்கு சென்றுள்ளனர்.

 

அப்போது ஆழமான பகுதிக்கு சில குழந்தைகள் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் அலறி சத்தமிட்டுள்ளனர். இதை கேட்ட அருகில் இருந்தவர்கள் குளத்தில் குதித்து குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இதில் தண்ணீரில் மூழ்கி சித்திரவேல் மகள்  வைத்தீஸ்வரி (10) (5ஆம் வகுப்பு). பாலமுருகன் மகள்  ப்ரீத்தி(11) (6ஆம் வகுப்பு) என்ற இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டார்கள் மேலும் நாயகம் மகள்  நர்மதா (10) என்ற குழந்தை எஸ் பி பட்டிணம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் இங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon