நண்டு பிடிக்க சென்ற தம்பதி..சிக்கிக் கொண்டது எப்படி..?
சென்னை பட்டினம் பாக்கம், அடையாறு, முகத்துவாரம் பகுதியில் கண்டுபிடிக்க சென்ற ஆதிகேசவன் – செல்வி தம்பதி நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றின் மையப் பகுதியில் இருந்து மணல் திட்டில் தஞ்சமடைந்தனர்.
ஆதி கேசவனின் செல்போனில் பேலன்ஸ் இல்லாத நிலையில் சற்று நேரத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனதால் மற்றவர்களை உதவிக்கு அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பெற்றோர் வீட்டிற்கு திரும்பாததால் அவர்களை தேடி படகில் சென்ற மகன் அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். 4 மணி நேரமாக மணல் திட்டில் தஞ்சம் அடைந்திருந்த தம்பதியை மெரினாமீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





