ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்..!

ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை பாஜக நசுக்க விரும்புவதாக ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருவதாகவும், தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொய்களை பரப்புவதை கண்டிக்கும்படியும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பாஜகவின் கொள்கைகள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.