தேனி அருகே விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை வார்டன் அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த விடுதி வார்டன் சசிரேகா மற்றும் சமையலர் மாலதி ஆகியோர் விடுதி வேலைகளை மாணவிகளை வைத்து மேற்கொண்டு வருவதாகவும் மாணவிகளுக்கு தரமற்ற உணவுகளை கொடுப்பதாகவும் இதுகுறித்து வெளியே சொன்னால் தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்களை அடித்து துன்புறுத்திய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.