இஸ்ரேலை கண்டித்த சவுதி பட்டத்து இளவரசர்..!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கண்டனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மற்றும் அரேபியத் தலைவர்களின் மாநாட்டில் பேசிய அவர், இத்தாக்குதல்களை இனப்படுகொலை என்று கூறி, இதில் சர்வதேச சமூகம் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

 

 

மேலும், ஈரானின் இறையாண்மையை இஸ்ரேல் மதிக்க வேண்டும் எனவும் பாலஸ்தீன நாடு அமைந்தால்தான் இஸ்ரேலை நாடாக அங்கீகரிப்போம் என்றார்.