தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலினின் தாயார், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் அவர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்தினரை, அந்த சமயத்தில் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.