வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது காரணமாக, சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவில் இருந்து பலமாக காற்று வீசிய நிலையில், பின்னர் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால், கே.கே. நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அமைந்தகரை, கிண்டி, மயிலாப்பூர், மந்தைவெளி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. அதிகாலையும் கனமழை நீடித்தது.
சென்னை மாநகரைப் போன்று புறநகரிலும் கனமழை கொட்டியது. குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், மேடவாக்கம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளிலும், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.