--- --:--:-- --

சிறப்பு ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

3

மும்பையில் ரயிலில் ஏறும் பொழுது கூட்ட நெரிசலில் தவறி விழுந்து பலர் படுகாயம் அடைந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

மும்பை பாந்த்ராவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. தீபாவளி ரயில் முன்பதிவிட்டும் ரயிலில் கூட்டம் கடுமையாக இருந்த நிலையில் மேலும் பலரும் ஏற முயன்றனர்.

 

பலரும் உள்ளே செல்ல முடியாமல் தவித்த நிலையில் ரயில் நகர தொடங்கியது. அப்பொழுது பலரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பத்து பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon