இந்த மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மூடல்!
மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று முதல் அக். 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருது சகோதரர்கள், தேவர் குருபூஜையையொட்டி, மூன்று மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்டவை அக்.27-30ஆம் தேதி வரை இயங்கக்கூடாது. இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




