--- --:--:-- --

திருவாடானையில் ஒரு வருடத்திற்கு மேலாக சீரான குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி..!

2

திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சீரான குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், சூச்சனி கிராமங்கள் உள்ளது. இங்கு முந்நூற்றுக்கும் மேற்பட்ட குடிகள் உள்ளது.

 

இந்த ஊருக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடந்து வந்து பணி முற்றுப்பெற்றுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதமாக சுத்தமாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றன்.
பல மாதமாக பணம் கொடுத்து வாங்குவதாக கவலை தெரிவித்தனர்.

 

அப்படி வாங்கும் குடிதண்ணீர் ஒரு குடம் 15 ரூபாய் எனவும், செலவு செய்யும் தண்ணீர் குடம் ரூபாய் பத்துக்கும் வாங்கும் அவல நிலை உள்ளது. இது பற்றி பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.

 

அதிகாரிகள் இருக்கின்றார்களா என்ற கேள்வியும் எழுப்பினர். தொடர்ந்து குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை கையில் எடுக்கப் போவதாக இப்பகுதி மக்கள் எச்சரிக்கை தெரிவித்தனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon