தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைக்கு லீவு வேண்டும்..!
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். மழை வெள்ள பாதிப்பு காலங்களில் கூட டாஸ்மாக் மதுபான கடைகளை மூடாத திமுக அரசு டாஸ்மாக் வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மதுவை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





