நடிகர் விஜயின் அரசியல் வருகை..நமிதா கருத்து..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே என நடிகையும், பாஜக உறுப்பினருமான நமிதா தெரிவித்துள்ளார். சென்னை நெசப்பாக்கத்தில் மத்திய அமைச்சர் நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு தான் பலரும் அரசியலுக்கு வருவதாகவும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி தான் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





