திருப்பூரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 09.11.2023-ம் தேதி ரங்கநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு Whats app – ல் Google Map Review Job – Investment செய்தால் கமிஷன் பணம் கிடைக்கும் என்று செய்தி வந்துள்ளது. அதனால் மனுதாரர் Invest செய்து Task முடித்து அதற்கான கமிஷன் பணம் பெற்றுள்ளார்.
அதனடுத்த நிலைகளுக்கு செல்வதற்கு @gehnarecep என்ற Telegram ID-யை தொடர்பு கொண்டு மனுதாரர் தொடர்ந்து Invest செய்தால் அதிக கமிஷன் பணம் கிடைக்கும் என்று நம்பி ரூ.5,00,000- பணம் Invest செய்துள்ளார். அதன் பிறகு கமிஷன் பணம் கிடைக்காமலும், முதலீடு செய்த பணமும் பெறப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புகார்தாரர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மாநகரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடையவர்களை தேடி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படையினர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்று சித்திக்குள் அக்பர்(21),மிதுன் மோகனன் (27), உமர் ஜமால் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்து நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் Telegram மற்றும Whatsapp மூலம் டாஸ்க் முறையிலும் சேர்மார்கெட்டிலும் மற்றும் Forex and Crypto Trading போன்ற போலியான முதலீடுகளை Catalyst Capitalix போன்ற நிறுவனங்களின் பெயரில் போலியாக Trading website-களை உருவாக்கி அதில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வரும் எவ்வித குறுஞ்செய்திகளையோ, சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களையோ, தொலைபேசி அழைப்புகளை நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.