--- --:--:-- --

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் கண்காணிப்பு பணி தீவிரம்..!

14

ருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் 11 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

வார இறுதி நாட்களில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைவீதிகளில் அதிகப்படியான காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

வார இறுதி நாட்களில் போக்குவரத்து சரி செய்யும் பொருட்டு போக்குவரத்துக் காவலர்கள் அதிக இடங்களில் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி உத்தவுப்படி திருப்பூர் மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிகளில் சட்டம் & ஒழுங்கு காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படை காவலர்கள் என மொத்தம் 500 காவலர்கள் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon