--- --:--:-- --

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு..!

3

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.அதன்படி இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதே போல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறைகள், பால்வளத்துறை, குடிநீர்வழங்கல் துறை உள்ளிட்டவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத்துறை, காய்கறிகள், இதர அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில், விமான நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கனமழை எச்சரிக்கையால், சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்த பணியாளர்களைக் கொண்டோ, வீட்டில் இருந்தோ பணியாற்ற தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon