கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் கவிழ்ந்த கார்..!
கேரள மாநிலம் கொச்சியில் கணவன் மனைவி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்ததில் தம்பதியை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.
கொட்டார கரையைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி விஷ்வையாவுடன் ஷிப்ட் காரில் ஆலுவா நோக்கி சென்ற பொழுது கனமழை பெய்தது. அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள 15 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்தது.
கார் கவிழ்ந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தம்பதி சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் சமயோசிதமாக யோசித்து தண்ணீரில் மூழ்கி காரின் கதவுகளை திறக்காததால் டிக்கி வலியாக வெளியேறி கார் மீது நின்றதால் காயம் இன்றி உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





