தனியார் கல்லூரி மாணவரை தாக்கிய மர்ம நபர்கள்..!
பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி உடுமலை சாலை தேப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பேக்கரியில் நேற்று முன்தினம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தினர். சண்டை சேவல் வியாபாரம் செய்யும் முத்துக்குமார் என்பவருக்கும் தனியார் கல்லூரி மாணவருக்கும்தாக்குதல் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் இரு தரப்பினரையும் அழைத்து கோமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





