--- --:--:-- --

குளத்தை ஒட்டியுள்ள சாலையில் மண் சரிவு..இடிந்து போன குளத்தின் பக்கவாட்டு சுவர்..!

3

ன்னியாகுமரி மாவட்ட விடைகொடு அருகே குளத்தின் அருகே உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக மண் தோண்டி எடுக்கப்பட்டது அதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இடைக்கோடு பேரூராட்சியில் செம்மங்காலை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சீராணி குளம் உள்ளது.

 

இந்த நிலையில் குளத்தை ஒட்டி உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டு குலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக குளத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இது குறித்து அந்த பகுதி பொதுப்பணித்துறை அதிகாரி தாள மூர்த்தியை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த விவகாரம் தொடர்பாக புகார் வந்துள்ளதாக கூறினார். உடனடியாக புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon