வீடியோ சிக்கினாலே 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
ரயில்களில் மோதலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களில் செல்லும் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபடுவதும் பிற கல்லூரி மாணவர்களுடன் மோதலில் ஈடுபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது.
இந்நிலையில் புதிய சட்டத்தின் அடிப்படையில் மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து கேமரா, செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் இருந்தாலே வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழி வகை உள்ளதாக ரயில்வே காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் முதலில் ஈடுபடும் மாணவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய சட்ட திருத்தத்தின்படி முதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்றும் ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





