--- --:--:-- --

சாம்பல் உரத்தில் கலப்படம்..அழுகிய வாழை கன்றுகள்..புலம்பும் விவசாயிகள்..!

5

டலூர் அருகே கலப்படம் செய்த சாம்பல் உரத்தால் வாழை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாண்டியா தோப்பு கிராமத்தில் விவசாயிகள் பெருமளவு வாழை பயிர் செய்து வருகின்றனர்.

 

2 நாட்களுக்கு முன்பு கரும்பு சர்க்கரை அளவிலிருந்து கரும்பு நீக்கப்பட்ட சாம்பலை கொண்டு வந்த விவசாயிகள் உரமாக போட்டுள்ளனர். இரண்டு நாள் கழித்து வந்து பார்த்தபொழுது ஐந்து ஏக்கரும் வாழை மரக்கன்றுகள் அனைத்தும் அழுகி இருப்பதை கண்டு விவசாயிகள அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது குறித்து விவசாயிகள் கேட்ட பொழுது பணியாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த விவசாயி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon