--- --:--:-- --

AI மூலமாக மகன் அழுவது போல் நடித்து தாயிடம் மோசடி..!

5

வெளிநாட்டில் படித்தவரும் கன்னியாகுமரி மாணவன் அழுவது போல AI தொழில்நுட்பத்தில் உருவாக்கிய குரல் பதிவை அவனது தாய்க்கு அனுப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

அயர்லாந்தில் படித்து வரும் மாணவனின் தாயாரை கடந்த மூன்றாம் தேதி whatsapp மூலம் தொடர்பு கொண்ட ஆசாமி இந்திய தூதரக அதிகாரி என அறிமுகப்படுத்தியதோடு பெண்ணின் மகன் மீது குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்துள்ளதாக கூறி அவரது மகன் அழுவதை போன்று ஆடியோவை அனுப்பி உள்ளார்.

 

மகனை விடுவிக்க கேட்ட பணத்தை அனுப்பி வைத்த பிறகு அந்த பெண் மகனை செல்போனில் தொடர்பு கொண்டாராம். அப்பொழுது மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon