--- --:--:-- --

ஏடிஎம்மில் பணம் வராது..மூதாட்டியிடம் ரூ.30,000 பணம் மோசடி..!

8

நாமக்கல்லில் ஏடிஎம் கார்டை மாற்றி மூதாட்டியிடம் முப்பதாயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சிதம். இவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்ற பொழுது அங்கே நபர் பணம் முடிந்தது போல் நடித்து கார்டை வாங்கி உள்ளார்.

 

பின்பு பணம் வரவில்லை எனக்கூறி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்த பின்பு முப்பதாயிரம் ரூபாயை எடுத்துள்ளார். பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சடைந்த மூதாட்டி இது குறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon