--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த லாரி..பிரேக் போட்ட முதல் கார் ஓட்டுநர்..!

11

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை அடுத்தடுத்து 4 கார்கள் மோதி கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

அதேபோல் பவானி பின்னால் வந்தவர்களும் பிரேக் போட்டனர். இதில் கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

 

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த ஆறு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon