காரைக்கால் கடற்கரையில் அதிர்ச்சி..ஆதாரத்தோடு வீடியோ வெளியிட்ட நபர்..!
விருதுநகரில் மின்கம்பத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கும் நிலையில் காரைக்காலில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலா தின விழா நடைபெற்று வருகிறது. விழாவை காண ஆயிரக்கணக்கானோர்கள் வந்து செல்லும் நிலையில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன.
அந்த மின்கம்பங்களில் இருந்து மின்கசிவு ஏற்படுவதை ஆதாரத்தோடு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். மின்கம்பத்தில் டெஸ்டர் வைத்ததும் அது ஒளிரும் காட்சி அவர் வெளியிட்டு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





