மாணவியை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்..!
திருத்தணியில் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவியை தெருநாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதியில் வசிக்கும் கார்த்திக்கு என்பவரின் மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நண்பகல் உணவு சாப்பிட்ட பிறகு பள்ளிக்கு இடையில் வந்த பொழுது தெருநாய்கள் துரத்தி கடித்ததில் மாணவி படுகாயம் அடைந்தார்.
அந்த பகுதி மக்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





