--- --:--:-- --

கருப்பன் வலசில் வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி..!

3

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அருகே உள்ள கருப்பன் வலசு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் உள்ள ஆடுகள் பட்டியில் வெறிநாய்கள் புகுந்து 30 ஆடுகளை கடித்துக் குதறியது.

 

வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 12 ஆடுகள் மற்றும் 18 குட்டிகள் பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இதனால் விவசாயி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 3.50 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon