திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம்..!
திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 2016 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தை இல்லா தம்பதிகள் மட்டுமே தத்தெடுக்க முடியும்.
இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனி நபர்களும் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் உணர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தைகளை தத்து எடுக்கலாம்.
முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும். அதே நேரம் ஆண் பெண் என இருபாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஆணாக இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவார். மேலும் பெற்றக் குழந்தைகள் இருப்பினும் தம்பதிகள் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது.
தத்தெடுப்பு விதிகள் தற்பொழுது தளர்த்தப்பட்டு இருப்பதால் கூடுதல் எண்ணிக்கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கொண்ட பெற்றோர் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





