வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்தார். பொதுப்பெயர் வகை மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கடன் உதவியோடு, ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார்.