--- --:--:-- --

வயநாட்டில் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்..!

7

யநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மழை காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இஆர்எப் எனப்படும் தன்னார்வ மீட்பு குழுவினர் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு கொண்டுவரப்பட்டன. நேற்றைய தினம் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் அடர் வனப்பகுதி என்பதால் மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து சூரல் மலை மற்றும் முண்டகை ஆகிய பகுதிகளில் மழை பெய்ததால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ள மாநில அமைச்சர் முகமது ரியாஸ் இந்த பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் வனத்துறை அமைப்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon