நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை..!
சிவகங்கை மாவட்டத்தில் நியூ மேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியால் பாதிக்கப்பட்ட டைல்ஸ் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நியூ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் முதலீடுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி அப்பாவி மக்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது. இது குறித்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நியூமேக்ஸ் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நிலையில் இந்த நாள் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராமலிங்கமும் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் 14 கோடி ரூபாய் அளவுக்கு நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





